புனித ரீத்தம்மாள் ஆலயம்

04651 226 110

info@stritaofreethapuram.com

புனித ரீத்தம்மாள் ஆலயம்

புனித ரீத்தம்மாள்

1924-ல் புனித அகுஸ்தீனார் சபையை சார்ந்த அருட்சகோதரிகள் இங்கு ஓர் இல்லத்தை அமைத்து முதன்முதலாக கிறிஸ்துவ மறைபரப்புப் பணியில் ஈடுபட்டனர் அப்போது ரீத்தாபுரம், குளச்சல் பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. இக்னேஸ்ஷியஸ் மரியா குளச்சல் பங்குப் பணியாளராக இருந்தபோது, அருட் சகோதிரிகளின் துணையோடு ஓர் ஆலயத்தைத் தொடங்கினார். ஆலயப் பணி நிறைவுபெறும் தருவாயில் அவர் ஆலயத்திலேயே மரணமடைந்தார். புனித ரீத்தா பெயரில் புது ஆலயம் கட்டி முடிக்கப்பட்டடு 2-8-1945 அன்று மாத்திரவிளை பங்குப்பணியாளர் அந்தோணிமுத்து அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, மாத்திரவிளை பங்கின் கிளைப்பங்கானது. 1948 - ஆம் அண்டு ரீத்தாபுரம் புனித ரீத்தா பங்கு தனிப்பங்காக உயர்வு பெற்றது.

அருளப்பன் பங்கு பணியாளராக இருக்கும்போது 03-02-2002-ல் ஆயர் லியோன் அ.தர்மராஜ் அவர்களால் பெரிய அளவிலான புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 02-08-2002 காலை ஆலய அர்ச்சிப்புவிழா பங்கின் வைரவிழா ஆகியவற்றின் தொடக்கமாக காலையில் 60 இளைஞர்கள் சீருடை அணிந்து நட்டாலம் மறைசாட்சி தேவசகாயம் நினைவிடதிலிருந்து ஜோதி ஏந்தி ஊர்வலமாக ஓடி புனித ரீத்தா ஆலயத்தை வந்தடைந்தார்கள். மாலை ஆயர் லியோன் அ. தர்மராஜ் தலைமையில் ஆலய அர்ச்சிப்பு விழாவும் வைரவிழா நிறைவு விழாவும் நடைபெற்றன.

இப்பங்கில் புனித சிலுவை கன்னியர் இல்லம் ஒன்று செயல்படுகிறது. இங்கு பிராவிடன்ஸ் கன்னியர் இல்லம், பிராவிடன்ஸ் மகளிர் உயர் நிலைப்பள்ளி, பிராவிடன்ஸ் தங்கும் விடுதி, பிராவிடன்ஸ் தையல் பயிற்சியகம். பிராவிடன்ஸ் லேஸ் மையம், நல்வாழ்வு மையம், ஆகிய அமைப்புகள் உள்ளன. திருமண மண்டபம் ஒன்று ஆலயத்தின் அருகாமையில் அமைத்துள்ளது.