புனித ரீத்தம்மாள் ஆலயம்

04651 226 110

info@stritaofreethapuram.com

புனித ரீத்தம்மாள் பற்றி

புனித ரீத்தம்மாள்

இத்தாலி நாட்டில் ரோக்கா புரினா என்னும் கிராமத்தில் கி.பி.1381-ம் ஆண்டு மே 22 -ம் நாள் அந்தோனியா மான்சீனி , அமர்தாபெரி என்பவர்களுக்கு மகளாய் பிறந்தார். காசிய நகர் ஆலயத்தில் "ரீத்தாள்" என்னும் பெயருடன் திருமுழுக்கு பெற்றாள். அவளுடைய ஞானத்தாய் மார்கரீட்டாள். ரீத்தாள் தம் 10-ம் வயதிலேயே கன்னியர் மடத்திற்கு சென்று தான் ஒரு கன்னியராக வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார் . சிறுமியாய் இருந்ததால் அவளுடைய ஆவல் நிறைவேறவில்லை. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் 1399-ம் ஆண்டு பவுல் பெர்டினன்ட் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவர் பெயர் ஜாண், இளையவர் பெயர் பவுல், திருமண காலத்தில் நல்ல வாழ்க்கை வாழ்ந்த ரீத்தாவின் கணவர் பவுல் பெர்டினன்ட் நாளடைவில் குடிகாரரானார். தம் கணவரின் மனமாற்றத்திற்காக தொடர்ந்து செபித்தார். அதில் வெற்றியும் கண்டார். மனமாறி வாழ்ந்த பவுல் பெர்டினன்ட் கொடியவர்களால் கொலை செய்யப்பட்டார் . தம் தந்தையை கொலை செய்தவர்களை பழிவாங்க துடித்த மகன்களுக்காக செபித்தார். "இறைவா! என் மக்கள் இருவரும் கொலைப்பழி ஏற்று வாழ்வதை விட அவர்களை நீரே எடுத்துக்கொள்ளும்". அதுபோலவே இரு மகன்களும் நோயினால் இறைவனடி சேர்ந்தார்கள் . கணவனையும் , இரு மகன்களையும் இழந்த ரீத்தாள் மீண்டும் கன்னியர் மடத்தில் சேரவிரும்பி இறைவனை நோக்கி மன்றாடினார் . ஒருநாள் இரவில் தனியாக செபித்துக் கொண்டிருக்கும் போது இறை தூதரால் பூட்டப்பட்ட கன்னியர்மட ஆலயத்தினுள் கொண்டுபோய் விடப்பட்டார் .

அதிகாலையில் ஆலயத்தை திறந்த கன்னியர்கள் பூட்டப்பட்ட ஆலயத்தினுள் செபித்துகொண்டிருந்த ரீத்தவை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். இறையற்றலால் நடந்த அதிசய நிகழ்வை கண்ட கன்னியர்கள் ரீத்தாவை கன்னியர் மடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . ரீத்தாள் தனக்குத் தரப்பட்ட சமையல் செய்வது கன்னியர்களின் துணிகளை சலவை செய்வது தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது போன்ற பணிகளை இன்முகத்தோடு செய்துவந்தார் .ரீத்தாவின் கீழ்படிதலை சோதிக்க எண்ணிய தலைமை அன்னை காய்ந்த ரோஜா கம்பை நட்டுவைக்கப் பணித்தார்கள் . ரீத்தாள் இன்முகத்தோடு அக்காய்ந்த ரோஜா கம்பை நட்டு தண்ணீர் ஊற்றினார் . மறுநாளே அது ரோஜா செடியாக தளிர்த்தது . ரீத்தவின் இறைபக்தியும் மறையறிவையும் அவள் நிகழ்த்திய அற்புதங்களையும் கேள்விப்பட்ட அருட்தந்தையர்களும் திருமறைப் போதகர்களும் அவருக்கு கன்னிகைப் பட்டம் வழங்கும்படி பரிந்துரை செய்தனர் .அதன்படி ரீத்தாளுக்கு 1414-ம் ஆண்டு கன்னிகைப் பட்டம் வழங்கப்பட்டது.

இயேசுவின் திருச்சிலுவையின் முன் செபித்துகொண்டிருந்தபோது இறைமகன் இயேசுவின் பாடுகள் துன்பங்கள் அனைத்தும் அவளது மனக்கண்முன் தோன்றின . "தந்தையே நீர் அனுபவித்த காயத்துடனே சாகவேண்டும் " என்று வரம்கேட்டு மன்றாடினார் .பாடுபட்ட சொரூபத்திலிருந்த முள்முடியில் ஒருமுள் அம்புபோல் பாய்ந்துவந்து அவள் நெற்றியில் தாக்கியது . அவள் வேண்டி விரும்பி பெற்ற முள்முடி காயமும் ஆறாத புண்ணாய் ஆவலுடன் இருந்தது . புண்ணில் புரையேறி துர்நாற்றம் வீசியது. எனவே தனியறையில் தங்கவைத்தனர் . கன்னியர் அனைவரும் ரோமாபுரிக்கு சென்று அப்போதைய திருத்தந்தை 5-ம் நிக்கோலாஸ் அவர்களை சந்தித்து ஆசிபெற போவதாக தீர்மானித்தனர்.

Mission

ஆறா நெற்றிப்புண்காரணமாக ரீத்தாமாளுக்கு திருத்தந்தையை சந்திக்க அனுமதி மறுத்தார் மடத்துத் தாயார் . ரீத்தாள் மன உறுதியோடு யேசுவிடம் செபித்தார் . அவரது நேற்றிப்புண் இருந்த சுவடு கூட தெரியாமல் மறைத்து போயிருந்தது. திருத்தந்தையை சிந்தித்து காஷியாநகர் திரும்பியபின் மண்டும் தனக்கு இறைவன் ஆற்றிய புண்ணைத் தரவேண்டியபடி நித்திரை கொண்டார். காலையில் கண்விழித்த போது மீண்டும் அப்புண்ணானது தோன்றி சீழ் வடித்து கொண்டிருந்தது. இது கன்னியரிடையேயும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏண்ண வைத்தது.

ரீத்தாள் தன் மகன்கள் விண்ணகம் சென்றார்களா ஏன்றறிய ஆசித்து இறைவனிடம் ஓர் அடையாளத்தைக் கேட்டு மன்றாடினார். இத்தாலி நாட்டில் ரோஜா மலராத காலத்திலும் தன் மகன்களின் கல்லறை அருகில் ரோஜா மலர்திருக்க வேண்டினார்.அவருடைய உறவுக்காரர் ஒருவரை அனுப்பி தன் மகன்களின் கல்லறை அருகில் மலர்திருக்கும் ரோஜாவை பறித்துவரக் கேட்டார். அவ்வாறே அவர்கள் ரோஜாவை பறித்துவந்து கொடுத்தார்கள். இந்த செயல் முலம் அருட்சகோதிரி, ரீத்தாள் புகழ் நாடெங்கும் பரவியது.

கனிந்த மரத்தை நாடிவரும் பறைவைகள்போல வெகு தொலைவிலிந்ததும் பலர் அவரை நாடிவந்து அருள் ஆசிபெற்றுச் சென்றார்கள். அருளுரைக் கேட்டு அறுதல் பெற்றார்கள்.

நாளடைவில் உடல்நலம் குன்றி படுக்கையில் ஆனார் . அறிந்தொரெல்லாம் வந்து தரிசித்துச் சென்றார்கள் . படுத்த படுக்கையிலும் வந்தவர்களுக்காக இறைவனை வேண்டி செபித்தார் . பாலும் குனம்பெற்றுச் சென்றார்கள் . 1457-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தன்னைச் சூழ்ந்திருந்த அருட்சகோதரிகளிடம் "இதோ ஆண்டவர் என்னை அழைக்கிறார் " என்று கூறினார். யாருமில்லாத நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது . அவருடைய துர்நாற்றம் வீசிய நெற்றிப்புண்ணிலிருந்து சுகந்த மணம் பரவியது . ஆலய மணி தானாகவே ஓங்கி ஒலித்தது .நடந்த அற்புத நிகழ்ச்சியெல்லாம் கண்ட கன்னியர், அருட்ததையர் ஆயர் உட்பட அனைவரும் அன்னை ரீத்தாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும்படி பரிந்துரை விண்ணப்பம் செய்தனர். அவர்களுடைய விண்ணப்பத்தை ஏற்ற திருத்தந்தை 13-ம் சிங்காராயர் ரீத்தாவுக்கு 1900-ம் ஆண்டு மே மாதம் 24-ம் நாள் புனிதர்பட்டம் வழங்கி உயர்நிளைப்படுத்தினார். புனித ரீத்தாம்மாள் உயிர்நீத்து 550 ஆண்டுகள் நெருங்கிகொண்டிருக்கும் இந்நாழிலும் அவரது உடல் அவர்தம் பிறந்த ஊரான இத்தாலி நாட்டில் காசியா என்னும் நகரத்தில் பனித்த ரீத்தாம்மாள் பேராலயத்தில் அன்றுபோல் இன்றும் அழியாமல் அன்னையின் மேன்மையை பறைசற்றிக்கொண்டிருக்கிறது