ரீத்தாபுரம் புனித ரீத்தம்மாள் ஆலய இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
திருப்பலி நேரங்கள்
- * ஞாயிற்று கிழமை 7 மணிக்கு ஜெபமாலை 7.30 மணிக்கு திருப்பலி
- * திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி- கிழமைகளில் காலை 6.30 மணிக்கு திருப்பலி.
- * புதன் கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலி
- * மாதத்தின் முதல் வியாழன் 4.30 மணிக்கு ஜெபமாலை 5 மணிக்கு நவநாள் நோயளிகளுக்கான சிறப்பு திருப்பலி நற்கருணை ஆசீர்
- * மாதத்தின் முன்றாவது வியாழன் காலை 11 மணிக்கு ஜெபமாலை 11.30 மணிக்கு நவநாள் திருப்பலி நற்கருணை ஆசீர்( குடும்பப்பிரச்சினைகள்,நோயாளிகள்,நீண்ட நாள்களாக நிறைவேறாத காரியங்களுக்கான சிறப்பு திருப்பலி)
- * மாதத்தின் மற்ற வியாழக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு ஜெபமாலை 5 மணிக்கு நவநாள் திருப்பலி
- * மாதத்தின் இரண்டவது ஞாயிற்று கிழமை மாலை 3 மணிக்கு இறை இரக்க ஜெபம் தொடர்ந்து நற்கருணை ஆராதனை
பக்தசபை இயக்கங்கள்
- 1.மரியாயின் சேனை
- 2. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
- 3. இளைஞர் இயக்கம்
- 4. கத்தோலிக்க சங்கம்
- 5. கத்தோலிக்க சேவா சங்கம்
- 6. கிராம முன்னேற்ற சங்கம்
- 7. சிறுவழி இயக்கம்
- 8. பாலர் சபை
- 9. புனித வின்சென்ட் தே-பவுல் சங்கம்
- 10. பெண்கள் இயக்கம்
- 11. மறைக்கல்வி மன்றம்
செய்திகள்,நிகழ்வுகள்
ஆலய வரலாறு
1924-ல் புனித அகுஸ்தீனார் சபையை சார்ந்த அருட்சகோதரிகள் இங்கு ஓர் இல்லத்தை அமைத்து முதன்முதலாக கிறிஸ்துவ மறைபரப்புப் பணியில் ஈடுபட்டனர் அப்போது ரீத்தாபுரம், குளச்சல் பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. இக்னேஸ்ஷியஸ் மரியா குளச்சல் பங்குப் பணியாளராக இருந்தபோது, அருட் சகோதிரிகளின் துணையோடு ஓர் ஆலயத்தைத் தொடங்கினார். ஆலயப் பணி நிறைவுபெறும் தருவாயில் அவர் ஆலயத்திலேயே மரணமடைந்தார். புனித ரீத்தா பெயரில் புது ஆலயம் கட்டி முடிக்கப்பட்டடு 2-8-1945 அன்று மாத்திரவிளை பங்குப்பணியாளர் அந்தோணிமுத்து அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, மாத்திரவிளை பங்கின் கிளைப்பங்கானது. 1948 - ஆம் அண்டு ரீத்தாபுரம் புனித ரீத்தா பங்கு தனிப்பங்காக உயர்வு பெற்றது.
அருளப்பன் பங்கு பணியாளராக இருக்கும்போது 03-02-2002-ல் ஆயர் லியோன் அ.தர்மராஜ் அவர்களால் பெரிய அளவிலான புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 02-08-2002 காலை ஆலய அர்ச்சிப்புவிழா பங்கின் வைரவிழா ஆகியவற்றின் தொடக்கமாக காலையில் 60 இளைஞர்கள் சீருடை அணிந்து நட்டாலம் மறைசாட்சி தேவசகாயம் நினைவிடதிலிருந்து ஜோதி ஏந்தி ஊர்வலமாக ஓடி புனித ரீத்தா ஆலயத்தை வந்தடைந்தார்கள். மாலை ஆயர் லியோன் அ. தர்மராஜ் தலைமையில் ஆலய அர்ச்சிப்பு விழாவும் வைரவிழா நிறைவு விழாவும் நடைபெற்றன.
இப்பங்கில் புனித சிலுவை கன்னியர் இல்லம் ஒன்று செயல்படுகிறது. இங்கு பிராவிடன்ஸ் கன்னியர் இல்லம், பிராவிடன்ஸ் மகளிர் உயர் நிலைப்பள்ளி, பிராவிடன்ஸ் தங்கும் விடுதி, பிராவிடன்ஸ் தையல் பயிற்சியகம். பிராவிடன்ஸ் லேஸ் மையம், நல்வாழ்வு மையம், ஆகிய அமைப்புகள் உள்ளன. திருமண மண்டபம் ஒன்று ஆலயத்தின் அருகாமையில் அமைத்துள்ளது.
ரீத்தம்மாளை நோக்கி ஜெபம்
வேதனையின் பளுவால் அழுத்தப்பட்டுருக்கும் நான் ஒ தூய ரீத்தம்மாளே! நம்பிக்கையோடு உம்மை நாடி வருகிறேன். வேண்டுவோர் அடையாதது ஒன்றுமில்லை என அழைக்கப்படும் நீர் என்னை அழுத்தும் கவலைகளினின்று என் எளிய மனதை விடுவித்து என் உள்ளத்திற்கு அமைதியை அளித்தருளும் நீவீர் மிகவும் கைவிடுப்பட்டோரின் காவலாளியாய் கடவுளால் ஏற்ப்படுத்தப்பட்டுள்னீர். நான் மிகவும் விரும்பும் இந்த வரத்திற்காய் வேண்டுவீர் ( தேவைப்படும் காரியத்தை குறிப்பிடவும் ) உமது பாதுகாவலின் வல்லமையை நான் மட்டும் உணராமல் இருப்பது சாத்தியமாகுமோ?
நான் கேட்பதை அடைய என் பாவங்கள் தடையாயிக்குமாயின் கடவுளிடமிருந்து நான் திருத்திய பாவமன்னிப்பு பெறும் வரத்தை பெற்றுத்தாரும்
இன்னும் தொடர்ந்து என் இதய கடினத்தால் கண்ணீர் பொழிய வைக்காதேயும். ஓ புனிதையே! உன் மீதுள்ள என் ஆழ்ந்த நம்பிகையை உறுதிபடுத்தும் வேதனையுண்ட உள்ளங்களின் பால் தாங்களுக்குள்ள அளவுகடந்த இரக்கத்தை எங்கும் அறிக்கையிடுவேன்.
திருச்சிலுவை நாயகனின் வியக்கத்தக்க மணவாட்டியே ! அவர் உமது நெற்றியில் மிக வேதனைக்குரிய முட்காயங்களில் ஒன்றை கொடையாக பதித்துள்ளார். நான் நலமே வாழ்த்து நல் மரணமடைய உதவுவாய்! ஆமென்.
பங்கு தந்தையின் செய்தி
அனà¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯à¯€à®°à¯
வணகà¯à®•à®®à¯à®®à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®•à®³à¯à®®à¯..... இநà¯à®¤ இணையதளம௠வழியாக உஙà¯à®•à®³à¯ˆ சநà¯à®¤à®¿à®ªà¯à®ªà®¤à®¿à®²à¯ மகிழà¯à®šà¯à®šà®¿.
இயலாத காரியஙà¯à®•à®³à¯ˆ சாதிபà¯à®ªà®µà®°à¯à®®à¯,சிகà¯à®•à®²à¯à®•à®³à¯ கà¯à®´à®ªà¯à®ªà®™à¯à®•à®³à¯ நிறைநà¯à®¤ கà¯à®Ÿà¯à®®à¯à®ª வாழà¯à®µà®¿à®±à¯à®•à¯ தீரà¯à®µà¯à®•à®³à¯ˆ பெறà¯à®±à¯ தரà¯à®®à¯. எம௠பாதà¯à®•à®¾à®µà®²à®¿ பà¯à®©à®¿à®¤ ரீதà¯à®¤à®®à¯à®®à®¾à®³à®¿à®©à¯ à®…à®°à¯à®³à¯ உஙà¯à®•à®³à¯ அனைவரோடà¯à®®à¯
இரà¯à®ªà¯à®ªà®¤à®¾à®• உஙà¯à®•à®³à¯ கà¯à®Ÿà¯à®®à¯à®ªà®™à¯à®•à®³à®¿à®²à¯ அமைதி நிலவà¯à®µà®¤à®¾à®•
இநà¯à®¤ இணையதளம௠நம௠பஙà¯à®•à¯‹à®Ÿà¯ நீஙà¯à®•à®³à¯ கொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ தொடரà¯à®ªà¯ˆ வளபà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®®à¯ எனà¯à®±à¯ நமà¯à®ªà¯à®•à®¿à®±à¯‡à®©à¯. பஙà¯à®•à®¿à®©à¯ வரலாறà¯, செயலà¯à®ªà®¾à®Ÿà¯à®•à®³à¯, நிகழà¯à®µà¯à®•à®³à¯ ஆகியவைகளை நீஙà¯à®•à®³à¯ தொடரà¯à®¨à¯à®¤à¯ தெரிநà¯à®¤à¯ கொளà¯à®³ இதà¯
நிசà¯à®šà®¯à®®à¯ உதவà¯à®®à¯ இறையாசீர௠எனà¯à®±à¯à®®à¯ உஙà¯à®•à®³à¯‹à®Ÿà¯ !....
கிறிஸà¯à®¤à¯à®µà®¿à®²à¯
Fr.à®…à®®à¯à®ªà¯à®°à¯‹à®¸à¯
பஙà¯à®•à¯à®¤à®¨à¯à®¤à¯ˆ